ஜப்பானின் 'ஆசிய நாடுகளின் ஆற்றல் மாற்ற முன்னெடுப்பினை' விரிவுபடுத்துவதன் மூலம் தூய்மையான ஆற்றல் மாற்றத்தினை நோக்கியப் பாதையில் இந்தியாவிற்கு உதவி வழங்க ஜப்பான் திட்டமிட்டுள்ளது.
ஜப்பான் நாட்டின் ஆசிய ஆற்றல் மாற்ற முன்னெடுப்பானது (AETI) 2021 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
இந்த முன்னெடுப்பானது ஆரம்பத்தில் நிகரச் சுழிய உமிழ்வு என்ற ஒரு நிலையினை அடைவதற்கு தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN) சார்ந்த சில நாடுகளுக்கு ஆதரவு அளித்தது.
2070 ஆம் ஆண்டிற்குள் நிகரச் சுழிய உமிழ்வு நிலையினை அடைவதற்கான இலட்சிய மிக்க இலக்கினை இந்தியா நிர்ணயித்துள்ளது.
ஜப்பான் நாடானது 2050 ஆம் ஆண்டிற்குள் நிகரச் சுழிய நிலையினை அடைவதென்ற இலக்கினை நிர்ணயித்துள்ளது.
உமிழ்வினைக் குறைக்க உதவும் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் பொருளாதார மாதிரிகளை இந்த நாடுகள் பயன்படுத்துகின்றன.