TNPSC Thervupettagam

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி ஆளுநர் குழுவின் ஐந்தாவது வருடாந்திரக் கூட்டம்

August 2 , 2020 1485 days 472 0
  • இது 'கனெக்ட்டிங் பார் டுமாரோ' (நாளைக்காக இணைவது) என்ற கருப்பொருளின் கீழ் இணைய வாயிலில் நடத்தப் பட்டது.

  • இந்தச் சந்திப்பில் சீனாவின் ஜின் லிகுன் மீண்டும் இதன் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.

  • தற்போது, இந்த வங்கியில் இந்தியாவானது 7.65% வாக்கிற்கான பங்குகளைப் பெற்று உள்ளது. அதே நேரத்தில் சீனா இந்த அமைப்பில் 26.63% பங்குகளை வைத்திருக்கிறது.

  • இச்சந்திப்பின் போது, அந்த வங்கியில் சேர லைபீரியா அளித்த விண்ணப்பத்திற்கு ஆளுநர் குழுவானது ஒப்புதல் அளித்துள்ளது.

  • இந்த வங்கியானது 57 நிறுவன உறுப்பினர்கள் என்ற அளவிலிருந்து 103 என்ற அளவில் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட வங்கியாக வளர்ந்துள்ளது.

  • இதன் ஆறாவது வருடாந்திரக் கூட்டம் 2021 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் நடத்தப் பெறும்.

  • மத்தியக் கிழக்கு நாட்டில் நடக்கும் முதலாவது வருடாந்திரக் கூட்டமாக இது அமையும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்