TNPSC Thervupettagam

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் மூன்றாவது வருடாந்திர சந்திப்பு

June 6 , 2018 2238 days 684 0
  • ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (Asian Infrastructure Investment Bank -AIIB) 3-வது வருடாந்திர சந்திப்பிற்கான முன் நடத்து நிகழ்வாக “தண்ணீர் மற்றும் தூய்மையின்” (Water and Sanitation) மீது இருநாள் கருப்பொருளுடைய கருத்தரங்கு (Thematic Seminar) புனேவில் நடைபெற்றது.
  • ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, பிக்கி அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து அறிவுசார் பங்களிப்பாளராக (Knowledge Partner) வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்போடு (Research and Information System -RIS) கூட்டிணைந்து மத்திய நிதி அமைச்சகத்தால் இந்தக் கருத்தரங்கு நடத்தப்பட்டது.
  • 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மும்பையில் நடைபெற உள்ள ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் 3வது வருடாந்திர சந்திப்பிற்கான முன் நடத்து நிகழ்வாக மத்திய நிதி அமைச்சகத்தால் நடத்தப்படும் எட்டு நிகழ்ச்சிகளுள் இந்தக் கருத்தரங்கும் ஒன்றாகும்.
  • தண்ணீர் மேலாண்மை தொடர்பாக இந்திய அரசானது சுவாஜல் (Swajal) எனும் திட்டத்தை துவங்கியுள்ளது.
  • இத்திட்டமானது ஊரகப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஒருங்கிணைந்த முறையில் போதுமான மற்றும் நீடித்த அளவிலான குடிநீரை வழங்குவதற்கான சமுதாய வழிநடத்துக் குடிநீர் திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்