TNPSC Thervupettagam

ஆசிய காண்டாமிருகங்கள் வசிக்கும் நாடுகளின் கூட்டம்

February 23 , 2023 641 days 344 0
  • ஆசிய காண்டாமிருகங்கள் வசிக்கும் நாடுகளின் 2வது கூட்டமானது டெல்லியில் சமீபத்தில் நடைபெற்றது.
  • மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சகம் (MoEFCC), மற்றும் சர்வதேச இயற்கை வளங்காப்பு அமைப்பு, ஆசிய காண்டாமிருக நிபுணர் குழு, உலக வனவிலங்கு நிதி-இந்தியா (WWF), சர்வதேச காண்டாமிருக அறக் கட்டளை மற்றும் ஆரண்யக் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகியவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • வேட்டையாடுதல், சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் வனவிலங்கு வர்த்தகம், வாழ்விட இழப்பு மற்றும் வெவ்வேறு பகுதிகளில் பிரிந்து காணப்படுதல் போன்ற காண்டாமிருகங்களைப் பாதிக்கும் முக்கியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் ஒத்துழைப்பை ஊக்குவிக்கச் செய்வதற்கும் இந்தச் சந்திப்பு ஒரு செயல்பாட்டு ஊக்கியாக உள்ளது.
  • ஆசியாவில் ஒற்றைக் கொம்பு, ஜாவான் மற்றும் சுமத்ரான் என்ற மூன்று வகையான காண்டாமிருகங்கள் உள்ளன.
  • ஜாவான் மற்றும் சுமத்ரான் வகை காண்டாமிருகங்கள் மிக அருகி வரும் நிலையில் உள்ள இனங்களாகும், என்றாலும் ஒற்றைக் கொம்பு (அல்லது இந்திய) காண்டா மிருகங்கள் பாதிக்கப்படக் கூடிய இனங்களாக உள்ளன.
  • 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்தோனேசியாவின் பந்தர் லாம்புங்கில் ஆசிய காண்டாமிருகங்கள் வசிக்கும் நாடுகளின் முதல் கூட்டமானது நடைபெற்றது.
  • பூடான், இந்தியா, இந்தோனேசியா, மலேசியா மற்றும் நேபாளம் ஆகியவை ஆசிய காண்டாமிருகங்கள் வசிக்கும் நாடுகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்