TNPSC Thervupettagam

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2019

April 29 , 2019 1910 days 666 0
  • ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் ஆனது தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள ஹீவாமார்ச் உள்ளரங்கத்தில் நடைபெற்றது.
  • முதன்முறையாக ஆடவர் மற்றும் மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் ஒன்றாக நடத்தப்பட்டன.
  • இந்தப் போட்டியானது சர்வதேச குத்துச் சண்டைச் சங்கத்தால் நடத்தப்பட்டது.
  • இந்தியாவானது இந்த போட்டித் தொடரை 2 தங்கப் பதக்கம், 4 வெள்ளிப் பதக்கம் மற்றும் 7 வெண்கலப் பதக்கம் என மொத்தமாக 13 பதக்கங்களுடன் முடித்தது.
  • ஹரியானாவின் அமீத் பங்கால் 52 கிலோ எடைப் பிரிவில் வென்று இப்போட்டியில் தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றார்.
  • 81 கிலோ எடைப் பிரிவில் நடப்பு உலக சாம்பியனான சீனாவின் வாங் லீனாவை வீழ்த்தி பூஜாராணி தங்கப் பதக்கத்தை வென்றார்.
  • ஆசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 81 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கம் இதுவேயாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்