TNPSC Thervupettagam
April 18 , 2018 2284 days 710 0
  • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தினால் (Board of Control for Cricket in India-BCCI) பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை போட்டியில் பங்கேற்க வைப்பது தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து அனுமதியைப் பெற இயலாததன் காரணமாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலானது (Asian Cricket Council-ACC) 50 ஓவர் ஆசிய கோப்பையின் போட்டி நடக்கும் இடத்தை (Asia Cup)  இந்தியாவிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (United Arab Emirates) மாற்றியுள்ளது.
  • ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைமையிடமான கோலாலம்பூரில்  நடைபெற்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சந்திப்பின் போது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அனைத்து நாடுகளும் 50 ஓவர் ஆசிய கோப்பைப் போட்டியின்  போட்டி நடக்கும் இடத்தை மாற்ற ஒருமனதாக ஏற்றுக் கொண்டதால் போட்டி நடக்கும் இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
  • செப்டம்பர் 13-ஆம் தேதி முதல் 28- ஆம் தேதி வரை  வரை துபாய் மற்றும் அபுதாபியில்  ஆசிய கோப்பைப்  போட்டி நடைபெற உள்ளது.
  • இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை (Biennial event) நடத்தப்படும் ஆசியக் கோப்பைப் போட்டியானது செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறவிருந்தது. இருப்பினும் பாகிஸ்தான் கிரிக்கெட் ஆணையம் கோப்பைக்கான போட்டியிடத்தை மாற்றிட வேண்டும் என தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
  • இந்த ஆசிய கோப்பைப் போட்டியானது இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் தேசிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெறுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்