வங்காள தேசத்தின் டாக்கா நகரில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையின் ஆடவர் ஹாக்கிப் போட்டியில் 4-3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது.
தென் கொரிய அணி 4-2 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
ஜப்பானின் கன்டா தனகா ஆட்ட நாயகராகவும், இந்தியாவின் சூரஜ் கர்கேரா சிறந்த கோல் கீப்பராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்தப் போட்டியில் தென் கொரியாவின் ஜாங் ஜாங்யுன் 10 கோல்கள் அடித்து அதிக கோல் அடித்தவர் என்ற ஒரு பெருமையைப் பெற்றார்.