TNPSC Thervupettagam

ஆசிய சிங்கங்கள் பாதுகாப்புத் திட்டம்

December 22 , 2018 2036 days 684 0
  • சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகமானது ஆசிய சிங்கங்கள் பாதுகாப்புத் திட்டத்தைத் தொடங்கி இருக்கின்றது.
  • இத்திட்டத்தின் குறிக்கோளானது உலகில் மிக நீண்ட காலமாக சுதந்திரமாக வாழும் ஆசிய சிங்கங்களையும் அது தொடர்புடைய சுற்றுச் சூழலியலையும் பாதுகாப்பதற்காக பணி செய்வது ஆகும்.
  • இது மத்திய அரசால் நிதியுதவி வழங்கப்படும் திட்டமான வனவிலங்கு வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நிதியளிக்கப்படும்.
  • இதன் செலவானது, 60: 40 என்ற விகிதத்தில் மத்திய மற்றும் மாநில அரசால் பகிர்ந்து கொள்ளப்படும்.
  • இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் மட்டுமே வாழ்ந்து வரும் ஆசிய சிங்கங்களானது IUCN-ன் (International Union for Conservation of Nature) சிவப்பு பட்டியலில் ‘அழிந்து வரும் இனமாக’ வகைப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்