ஆசியச் சிங்கத்தின் ஒட்டு மொத்த மரபணுவானது ஹைதராபாத்தில் உள்ள சிஎஸ்ஐஆர் – செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தைச் (CSIR- Centre for Cellular and Molecular Biology) சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் முதன்முறையாக வரிசையாக்கப்பட்டது.
இது ஆசியச் சிங்கங்களின் பரிணாம வளர்ச்சியை அறிந்து கொள்ளுவதற்கும் இந்த இனங்களின் சிறந்த மேலாண்மையை ஏற்படுத்துவதற்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும்.
ஆசியச் சிங்கங்களில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் அதன் அடிவயிற்றின் வழியே செல்லும் தோலின் நீளமான மடிப்பு ஆகும். இது ஆப்பிரிக்க சிங்கங்களில் காணப்படுவதில்லை.
ஆசியச் சிங்கங்களின் ஒரே வாழிடம் கிர் தேசியப் பூங்கா மற்றும் வன விலங்கு சரணாலயம் ஆகும்.