மூத்த இந்திய வனத்துறை அதிகாரியான ரமேஷ் பாண்டே என்பவர் புகழ்பெற்ற ஆசிய சுற்றுச்சுழல் அமலாக்க விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தினால் (UNEP - United Nations Environment Programme) விருது வழங்கப்பட்டுள்ளது.
1996 ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த IFS அதிகாரியான இவர் லக்னோவில் தலைமை வனப் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பின்வருவனவற்றிற்காக பாராட்டப்பட்டுள்ளார்.
வேட்டையாடுபவர்கள் குறித்த விசாரணை மற்றும் தகவல் சேகரிப்பு
எல்லை தாண்டிய சுற்றுச்சூழல் சார்ந்த குற்றங்களை எதிர்த்துப் போராடுதல்
இந்த விருதானது எல்லை தாண்டிய சுற்றுச்சூழல் சார்ந்த குற்றங்களைத் தடுப்பதற்கு ஆசியாவில் உள்ள பொது அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட தலைசிறந்த சாதனைகளை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.