TNPSC Thervupettagam

ஆசிய சுற்றுச்சூழல் அமலாக்க விருதுகள்

November 23 , 2018 2113 days 591 0
  • ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் 2018 ஆம் ஆண்டின் ஆசிய சுற்றுச்சூழல் அமலாக்க விருதிற்காக வனவிலங்கு குற்றத் தடுப்பு கழகம் (WCCB – Wildlife Crime Control Bureau) மற்றும் அதன் அமலாக்கத் தலைவர் R.S. ஷரத்தை தேர்ந்தெடுத்துள்ளது.
  • எல்லை கடந்த சுற்றுச்சூழல் குற்றங்களுக்கு எதிராக போராடுவதில் அவர்களின் சிறந்த பங்களிப்பிற்காக முறையே அமைப்பு மற்றும் தனிநபர் என்ற பிரிவுகளில் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
  • இந்த 2018 விருதானது UNEP உடன்
    • ஐ.நா. அபிவிருத்தி திட்டம் (UNDP – United Nations Development Programme)
    • மருந்துகள் மற்றும் குற்றங்களுக்கான ஐ.நா. அலுவலகம் (UNODC – United Nations Office on Drugs and Crime)
    • இன்டர்போல்
    • USAID
    • ஃப்ரீலாண்ட் அறக்கட்டளை மற்றும் ஸ்வீடன் அரசு

ஆகியவற்றுடன் இணைந்து வழங்கப்படுகிறது.

WCCB மற்றம் அதன் பின்னணி
  • WCCB ஆனது நாட்டில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகத்தின் கீழமைந்த, வனவிலங்குகள் மீதான முறைப்படுத்தப்பட்ட குற்றங்களுக்கு எதிராக போராடும் சட்டப்பூர்வமான பன்முக அமைப்பாகும்.
  • இது வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் 1972 என்பதை திருத்தப்பட்டதன் மூலம் ஜூன் 2007-ல் நிறுவப்பட்டது.
  • ஐ.நா. சுற்றுச்சூழலால் இரண்டாவது முறையாக இவ்விருதினை WCCB இவ்வருடம் பெறுகிறது.
  • கடந்த வருடம் ‘குர்மாவைப் பாதுகாக்கும் நடவடிக்கை’ என பெயரிடப்பட்ட குறிப்பிட்ட வகை சார்ந்த வனவுயிரிகளுக்கான பாதுகாப்பு அமலாக்கத்தை ஒருங்கிணைத்தமை மற்றும் நடத்தியமை ஆகிய முயற்சிகளுக்காக இவ்விருது அதற்கு வழங்கப்பட்டது.
  • இந்த நடவடிக்கையானது உயிருள்ள ஆமைகள் மற்றும் அதன் உறுப்புகளை சட்ட விரோதமாக வர்த்தகம் மூலம் அதிகப்படுத்துவதற்கு எதிராக செயல்படுவதை நோக்கமாகக் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்