TNPSC Thervupettagam

ஆசிய நாடுகளுக்கான திடீர் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை வழங்குவதற்கான மாதிரி

July 30 , 2018 2185 days 602 0
  • உலக வளிமண்டலவியல் அமைப்பானது (World Meteorological Organization - WMO) வியட்நாம், இலங்கை, மியான்மர் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு வெள்ளப்பெருக்கு பற்றிய எச்சரிக்கைகளை முன்கூட்டியே அளிப்பதற்கான திருத்தியமைக்கப்பட்ட மாதிரியை உருவாக்குவதற்கான முகவையாக இந்தியாவை நியமித்துள்ளது.
  • இம்மாதிரி திடீர் வெள்ளப்பெருக்கு வழிகாட்டுதல் அமைப்பு என்று அழைக்கப்படும்.
  • புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இந்திய வளிமண்டலவியல் துறை (Indian Meteorological Department - IMD) இந்த வானிலை மாதிரியினை அமைப்பதற்கு பணியாற்றும்.
  • அமெரிக்காவினால் உருவாக்கப்பட்டு WMO-க்கு வழங்கப்பட்ட திருத்தியமைக்கப்பட்ட இம்மாதிரி திடீர் வெள்ளப்பெருக்கு பற்றிய எச்சரிக்கையினை 6 மணி நேரத்திற்கு முன்பாகவே வழங்கும்.
  • இந்த முன் அறிவிப்பு மாதிரியின் மூலம் பயன்பெறும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானும் ஒன்றாகும். ஆனால் பாகிஸ்தான் இதில் பங்குபெற மறுத்துவிட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்