சர்வதேச நீர்ப் பறவைகள் கணக்கெடுப்பு என்பது 143 நாடுகளில் உள்ள சதுப்பு நிலங்களில் காணப்படும் நீர்ப்பறவைகளின் எண்ணிக்கை பற்றியத் தகவல்களைச் சேகரிக்கும் ஒரு கண்காணிப்புத் திட்டமாகும்.
ஒவ்வோர் ஆண்டின் குளிர்காலத்தின் நடுப்பகுதியில் மேற்கொள்ளப்படும் ஆசிய நீர்ப் பறவைகள் கணக்கெடுப்பின் கீழான இந்த கண்காணிப்புத் திட்டத்தின் ஓர் அங்கமாக இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.
இது உலகளவிலான ஈரநிலங்கள் மற்றும் நீர்ப் பறவைகளின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மையை ஆதரிக்கும் குடிமக்கள்-அறிவியல் சார்ந்த ஒரு திட்டமாகும்.
இந்தக் கணக்கெடுப்பு குறித்த தகவல்கள் eBird செயலியில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கேரளாவின் ஆலப்புழா என்ற பகுதிக்கு வருகை தரும் சில புலம்பெயர்ந்த நீர்ப் பறவைகளின் எண்ணிக்கையானது, குறிப்பாக வாத்து இனங்களின் எண்ணிக்கை என்பது குறைந்து வருவதை இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
முந்தைய ஆய்வுகளில் காணப்பட்ட தட்டைவாயன் வாத்து எனப்படும் நார்தர்ன் ஷோவலர், கிளுவை மற்றும் நாமத்தலை வாத்து போன்ற வாத்து இனங்கள் இந்த முறை இங்கு முற்றிலும் காணப் படவில்லை.