குஜராத் கூட்டுறவுப் பால்பொருள் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பின் (அமுல்) மேலாண்மை இயக்குநரான R.S. சோதி அவர்களுக்கு ஆசிய பசிபிக் உற்பத்தித்திறன் சாம்பியன் விருதானது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதானது டோக்கியோவின் ஆசிய உற்பத்தித் திறன் அமைப்பினால் வழங்கப் பட்டது.
மேம்பட்ட உற்பத்தித் திறன் மற்றும் திறன்மிகு பால் விநியோகம் போன்றவற்றை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதானது வழங்கப்படுகிறது.
கடந்த 20 ஆண்டுகளில் இந்த மதிப்புமிக்க விருதைப் பெற்ற முதல் இந்தியர் இவரே ஆவார்.