ஆசிய-பசிபிக் செவித் திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் 2024
December 19 , 2024 28 days 134 0
2024 ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் செவித் திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் 8 தங்கம், 18 வெள்ளி மற்றும் 29 வெண்கலப் பதக்கங்களுடன் இந்திய அணியானது அதிகப் பதக்கங்களை (55) வென்றுள்ளது.
1984 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தப் போட்டியின் பெரும் வரலாற்றில் இந்திய வீரர்களின் சிறந்தப் பங்கேற்பு இதுவாகும்.
தடகளப் போட்டியில் 5 தங்கம், 12 வெள்ளி, 11 வெண்கலம் என 28 பதக்கங்களுடன் அதிகபட்சப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த 12 வீரர்கள் பல்வேறு விளையாட்டுகளில் 6 தங்கம், 13 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.