TNPSC Thervupettagam

ஆசிய பசிபிக் நிலைத் தன்மைக் குறியீடு 2021

July 7 , 2022 873 days 444 0
  • 2021 ஆம் ஆண்டின் ஆசிய பசிபிக் நிலைத்தன்மைக் குறியீடானது நைட் ஃபிராங்க் என்ற உலகளாவியச் சொத்து ஆலோசக நிறுவனத்தினால் சமீபத்தில் வெளியிடப் பட்டது.
  • இந்தக் குறியீட்டில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது.
  • அதைத் தொடர்ந்து சிட்னி, வெலிங்டன், பெர்த் மற்றும் மெல்போர்ன் ஆகியவை உள்ளன.
  • ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் வணிக ரீதியிலான மனை விற்பனைத் தொழில் துறையில் பசுமைத் தரம் பெற்ற முதல் ஐந்து நகரங்கள் இவையாகும்.
  • இந்திய அளவில் பெங்களூரு முதலிடம் பிடித்தது.
  • மேலும் ஆசிய-பசிபிக் பிராந்திய அளவில், இந்த நகரம் 14வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • ‘தங்கம்என்ற தரப் பிரிவை எட்டிய ஒரே இந்திய நகரம் பெங்களூரு ஆகும்.
  • ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் டெல்லி 17வது இடத்தைப் பெற்றுள்ளது.
  • ஹைதராபாத் இந்திய அளவில் 3வது இடத்திலும், ஆசிய பசிபிக் பிராந்திய அளவில் 18வது இடத்திலும் உள்ளது.
  • மும்பை இந்திய அளவில் 4வது இடத்திலும், ஆசிய பசிபிக் பிராந்திய அளவில் 20வது இடத்திலும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்