ஆசியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசையை டைம்ஸ் உயர் கல்விக்கான உலக பல்கலைக்கழகங்கள் தரவரிசை அமைப்பு வெளியிட்டுள்ளது.
இதில் முன்னணி 50 ஆசிய பல்கலைக்கழகங்களில் இரு இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.
முதல் 50 இடங்களில், இந்தியாவின் இந்திய அறிவியல் நிறுவனம் (Indian Institute of Science) 29-வது இடத்திலும், மும்பையின் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (Indian Institute of Technology-IIT) 44-வது இடத்திலும் உள்ளன.
கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இவ்வாண்டு மொத்தம் 17 இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் முதல் 200 இடங்களில் உள்ளன.
கடந்த ஆண்டிற்கான பட்டியலில் 41-வது இடத்திலிருந்த சென்னையின் இந்திய தொழில்நுட்ப கழகமானது (Indian Institute of Technology-IIT) பெரிதளவு பின்தங்கி நடப்பாண்டிற்கான பட்டியலில் 103 வது இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த ஆண்டைக் காட்டிலும் இவ்வாண்டிற்கான தரவரிசை பட்டியலில் சற்று அதிகமான இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.