TNPSC Thervupettagam

ஆசிய மகளிர் குத்துச் சண்டை – சாம்பியன் ஷிப் – 2017

November 9 , 2017 2601 days 895 0
  • ஐந்து முறை உலகச் சாம்பியனும் ஒலிம்பிக் வெண்கலப் பதக்க வீராங்கனையுமான மேரி கோம், வியட்நாமின் ஹோசிமின் நகரத்தில் நடைபெற்ற ஆசிய மகளிர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் 48 கிலோ எடைப்பிரிவில் தனது ஐந்தாவது தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
  • உலகச் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில்   வெள்ளிப்பதக்கம்  வென்ற வீராங்கனையான  சோனியா, சீனாவின் யின் ஜுன்ஹீவாவிடம் தோல்வி அடைந்து 57 கிலோ எடைப்பிரிவில் இரண்டாவது முறையாக வெள்ளிப் பதக்கததை வென்றார்.
  • ஆசிய கண்டத்திற்கான இந்த குத்துச்சண்டை விளையாட்டுப் போட்டியில் இந்தியா ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஐந்து வெண்கலப் பதக்கங்களுடன் போட்டியை நிறைவு செய்தது.
  • மேரி கோம் 2014 ஆம் ஆண்டின் ஆசிய குத்துச் சண்டை போட்டிக்கு பிறகு இது அவர் பெரும் முதல் சர்வதேச தங்கப்பதக்கமாகும்.
  • குத்துச் சண்டை விளையாட்டிற்கு மேரி கோமின் சிறந்த பங்களிப்பிற்காக இவருக்கு பத்ம பூஷண் (2013), பத்ம ஸ்ரீ (2010) மற்றும் குத்துச் சண்டைக்கான அர்ஜீனா விருது (2003) போன்ற விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்