TNPSC Thervupettagam

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி - 2020

February 25 , 2020 1609 days 778 0
  • இந்தப் போட்டியில் இந்தியா 5 தங்கம், 6 வெள்ளி மற்றும் 9 வெண்கலம் ஆகியவற்றை வென்றுள்ளது.
  • இது இந்தியாவில் உள்ள புது தில்லியில் நடத்தப்பட்டது.
  • இந்திய மகளிர் மல்யுத்த வீராங்கனைகளான சரிதா மோர், பிங்கி, திவ்யா கக்ரன் ஆகியோர் இந்தியாவிற்காக தங்கப் பதக்கங்களைப் பெற்றனர்.
  • இதற்கு முன்பு, 2018 ஆம் ஆண்டில் கிர்கிஸ்தானின் பிஷ்கெக்கில் நவ்ஜோத் கவுர் என்பவரின் மூலம் மூத்தோர் ஆசிய சாம்பியன்ஷிப் மகளிர் போட்டியில் இந்தியா ஒரே ஒரு தங்கப் பதக்கத்தை மட்டுமே வென்று இருந்தது.
  • 2019–20 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக சீனா இந்தப் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப் பட்டுள்ளது.
  • கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தின் காரணமாக ஜனநாயகக் கொரிய மக்கள் குடியரசு மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகியவை  இந்தப் போட்டியில் பங்கேற்க முடியவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்