இந்தப் போட்டியில் இந்தியா 5 தங்கம், 6 வெள்ளி மற்றும் 9 வெண்கலம் ஆகியவற்றை வென்றுள்ளது.
இது இந்தியாவில் உள்ள புது தில்லியில் நடத்தப்பட்டது.
இந்திய மகளிர் மல்யுத்த வீராங்கனைகளான சரிதா மோர், பிங்கி, திவ்யா கக்ரன் ஆகியோர் இந்தியாவிற்காக தங்கப் பதக்கங்களைப் பெற்றனர்.
இதற்கு முன்பு, 2018 ஆம் ஆண்டில் கிர்கிஸ்தானின் பிஷ்கெக்கில் நவ்ஜோத் கவுர் என்பவரின் மூலம் மூத்தோர் ஆசிய சாம்பியன்ஷிப் மகளிர் போட்டியில் இந்தியா ஒரே ஒரு தங்கப் பதக்கத்தை மட்டுமே வென்று இருந்தது.
2019–20 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக சீனா இந்தப் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப் பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தின் காரணமாக ஜனநாயகக் கொரிய மக்கள் குடியரசு மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகியவை இந்தப் போட்டியில் பங்கேற்க முடியவில்லை.