கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகர் பிஷ்கெக் (Bishkek) நகரில் நடைபெற்ற ஆசிய சீனியர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் 65 கிலோ ஃப்ரீ ஸ்டைல் பிரிவில் இந்திய குத்துச் சண்டை வீராங்கனை நவ்ஜோத் கௌர் ஜப்பானின் மியா இமாய்-யை வீழ்த்தி தங்கம் வென்றுள்ளார்.
இதன் மூலம் ஆசிய சீனியர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய குத்துச் சண்டை வீராங்கனை என்ற சாதனையை நவ்ஜோத் கௌர் படைத்துள்ளார்.
தற்போது பிஷ்கெக்கில் நடந்து வரும் ஆசிய சீனியர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 65 கிலோ ஃப்ரீ ஸ்டைல் பிரிவில் இந்தியாவின் முதல் தங்கம் இதுவேயாகும்.
ரியோ ஒலிம்பிக்கில் குத்துச் சண்டையில் வெண்கலம் வென்ற வீரங்கனையான சாக்ஷி மாலிக் 62 கிலோ ஃப்ரீ ஸ்டைல் எடைப் பிரிவில் வெண்கலம் வென்றுள்ளார்.
இந்தியா தற்போது ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களைப் பெற்றுள்ளது.