ஆசிய மேம்பாட்டு வங்கியின் 51-வது வருடாந்திர மாநாடு
May 9 , 2018 2392 days 741 0
பிலிப்பைன்ஸ் அரசு மணிலாவில் ஆசிய மேம்பாட்டு வங்கியின் 51-வது வருடாந்திர மாநாட்டை நடத்தியது.
1966-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஆசிய மேம்பாட்டு வங்கி, வறுமை நிலையிலிருந்து மக்களை உயர்த்துவது (To lift people out of poverty) மற்றும் சமூகத்திற்கு அதிகளவில் பயனளிக்கும் திட்டங்களுக்கு நிதியளிப்பது ஆகியவற்றை கட்டாயமான ஒன்றாகக் கொண்டுள்ளது.
துவங்கிய காலம் முதல் வழக்கமாக (Conventionally) ஜப்பான் ஆளுநரால் தலைமையேற்கப்படும். இவ்வங்கிக்கு அதிகளவிலான நிதி ஜப்பான் மற்றும் அமெரிக்காவிடமிருந்து கிடைக்கப் பெறுகிறது.
ஆசிய மேம்பாட்டு வங்கியானது, ஆசியப் பகுதியைச்சேர்ந்த 48 நாடுகளுடன் சேர்த்து 67 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
ஆசிய மேம்பாட்டு வங்கியின் நிறுவன உறுப்பினரான இந்தியா, தற்போது நான்காவது மிகப்பெரிய பங்குதாரராக இருப்பதுடன், 2010-ஆம் ஆண்டிலிருந்து ஆசிய மேம்பாட்டு வங்கியின் மிகப்பெரிய கடன் பெறுநராகவும் உள்ளது.