ஆசிய ராஜாளிக் கழுகு இனப் பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்க மையம்
April 16 , 2023 594 days 426 0
உலகின் முதல் ஆசிய ராஜாளிக் கழுகுகளுக்கானப் பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்க மையம் உத்தரப் பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் திறக்கப்பட உள்ளது.
இதற்கு ஜடாயு பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்க மையம் (JCBC) எனப் பெயர் சூட்டப்பட உள்ளது.
15 வருட திட்டக் காலம் கொண்ட இது கழுகுகளின் எண்ணிக்கையைக் குறைந்தபட்சம் 40 ஆக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதில் பிடிக்கப்பட்ட இந்தக் கழுகுகளை இனப்பெருக்கம் அடைய செய்து அவற்றைக் காடுகளுக்குள் விடுவிக்கச் செய்வதன் மூலம் இந்த உயிரினங்களின் ஒரு நிலையான எண்ணிக்கையைப் பராமரிப்பதே இதன் நோக்கமாக உள்ளது.
வட இந்தியாவில் செந்தலைக் கழுகுகள் (Sarcogyps calvus) உள்ளூர் மயமாகியுள்ளன.
2004 ஆம் ஆண்டில், IUCN ஆல் குறைந்தபட்ச கவனம் தேவைப்படும் இனம் என்ற நிலையிலிருந்து 'அச்சுறு நிலையில் உள்ளவை’ எனும் நிலைக்கு இவ்வினங்கள் மாற்றப் பட்டது.
2007 ஆம் ஆண்டில், இது IUCN அமைப்பின் சிவப்புப் பட்டியலில் 'ஆபத்தான நிலையில் உள்ளவை' எனப் பட்டியலிடப்பட்டுள்ளது.