இராஜஸ்தானின் உதய்ப்பூரைச் சேர்ந்த கௌரவ் சாஹூ என்பவர் ஆசிய வளு தூக்குதல் சாம்பியன்சிப் போட்டியில் வென்று இந்தியாவிற்கான முதல் தங்கத்தை வென்றார்.
இது துருக்கியிலுள்ள இஸ்தான்புல் நகரில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் 66 வயதில் லோரைன் மோர், 165 கிலோகிராம் எடையைத் தூக்கி இந்தியாவிற்கு தங்கப் பதக்கத்தினை வென்று தந்துள்ளார்.
தமிழ்நாடு வனத்துறையைச் சேர்ந்த 48 வயதான ஓட்டுநரான மணிமாறன் இந்த போட்டியின் ஒட்டு மொத்தப் பிரிவில் தங்கத்தினை வென்றார்.
சங்கரன்கோவில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் இராஜா இப்போட்டியில் 140 கி.கி எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இவர் சமீபத்தில் நடந்த பளுதூக்குதல் போட்டியில் தேசிய அளவில் முதலிடம் பெற்றார்.
எனவே, இவர் 2022 ஆம் ஆண்டின் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றார்.
வளுதூக்குதல் (பெஞ்ச் பிரஸ் வகை மட்டும்) என்பது மாற்றுத் திறனாளிகளுக்கான ஒரு ஒலிம்பிக் போட்டி என்ற வேளையில் பளு தூக்குதல் என்பது ஒரு ஒலிம்பிக் போட்டி ஆகும்.