TNPSC Thervupettagam

ஆசிரியர் தினம் - செப்டம்பர் 05

September 6 , 2020 1482 days 522 0
  • இது டாக்டர் சர்வப் பள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை நினைவு கூர்கிறது.
  • இவர் 1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி தமிழ்நாட்டின் திருத்தணியில் பிறந்தார்.
  • இவர் ஒரு புகழ்பெற்ற அறிஞர், பாரத ரத்னா (1954) விருது பெற்றவர், சுதந்திர இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் இரண்டாவது குடியரசுத் தலைவர் ஆவார்.
  • ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பதவியைக் கொண்ட முதல் இந்தியர் இவர் ஆவார் (1936-1952).
  • இவர் 1948 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் நிர்வாகக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.
  • தேசிய ஆசிரியர் விருதுகள் இந்திய ஜனாதிபதியால் சிறப்பாகப் பணியாற்றிய  ஆசிரியர்களுக்கு வழங்கப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்