TNPSC Thervupettagam

ஆடைகளுக்கான ஊக்கத் தொகை விகிதம்

November 26 , 2017 2409 days 794 0
  • வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள அயல்நாட்டு வர்த்தகத்தின் பொது இயக்குனரகம், “இந்தியாவிலிருந்து வர்த்தகப் பொருள்கள் ஏற்றுமதி திட்டம்“ என்ற திட்டத்தின் கீழ் ஆடைப் பொருட்களுக்கான ஊக்கத் தொகையை அதன் ஆடைகளின் ஏற்றுமதி மதிப்பில் 2 சதவீதத்திலிருந்து 4 சதவீதம் என்ற அளவில் உயர்த்தியுள்ளது.
  • இந்த திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை விகிதமானது ஜவுளித் துறையின் கீழ் உள்ள ஆயத்த ஆடைகள், தயாரிக்கப்பட்ட துணிகள் என்ற இரண்டு துணைத் துறைகளுக்கும் பொருந்தும்.
  • இந்த நடவடிக்கையானது தொழிலாளர்கள் நிறைந்த துறையான ஆயத்த ஆடைகள் துறையின் ஏற்றுமதிக்கும் அதன் வேலைவாய்ப்பு மேம்பாட்டிற்கும் பெரிதும் ஊக்கமளிக்கும்.
  • “இந்தியாவிலிருந்து வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதி திட்டம் “என்ற திட்டமானது இந்திய வெளிநாட்டு வியாபாரக் கொள்கை (2015-20) என்பதன் கீழ் ஆரம்பிக்கப்பட்டது.
  • இதன் நோக்கங்களானது ஜவுளித் துறையின் உள்கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை களைவதும், இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு தயாரிக்கப்பட்ட ஜவுளிப் பொருட்கள் மற்றும் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதில் ஏற்படும் செலவுகளை குறைப்பதும் ஆகும்.
  • இந்தத் திட்டத்தின் கீழ், வர்த்தக அமைச்சகத் துறையானது உற்பத்தி செய்யப்படும் பொருட்களை பொறுத்து 2%, 3% மற்றும் 5% என்ற அளவில் வரிச் சலுகைகளை அளிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்