ஐக்கிய நாடுகள் சபையின் போதைப் பொருள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலகத்தினால் (UNODC) அடையாளம் காணப்பட்ட ஆட்கடத்தலின் போக்குகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
கடத்தலைத் தடுப்பதற்கும் அதனால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான ஆதரவினை வழங்குவதற்கும் அரசாங்கங்கள், சட்ட அமலாக்க முகமைகள் மற்றும் பொதுச் சமூகங்களுக்கு அழுத்தம் கொடுப்பதை இது முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “கடத்தலுக்கு ஆளான ஒவ்வொரு நபரைரையும் கண்டறிதல், ஒருவரும் விடுபட்டு விடக்கூடாது” என்பதாகும்.