ஆட்கடத்தல் மீதான உலகளாவிய அறிக்கை
January 10 , 2019
2148 days
627
- போதைப் பொருட்கள் மற்றும் குற்றங்கள் மீதான ஐ.நா. அலுவலகமானது அண்மையில் ஆட்கடத்தல் மீதான உலகளாவிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
- இந்த அறிக்கையின்படி மொத்த கடத்தல்களில் 30% அளவில் குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். மேலும் சிறுவர்களை விட சிறுமிகள் அதிக அளவில் கடத்தப்படுகின்றனர்.
- இந்த அறிக்கையானது கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2016 ஆம் ஆண்டில் ஐ.நாவின் நிறுவனங்களில் ஆட்கடத்தல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது.
- பாலியல் சுரண்டல்களுக்காக கடத்துவது ஐரோப்பிய நாடுகளில் மிகவும் பரவலாக உள்ளது.
- ஆப்பிரிக்க துணை சஹாரா பகுதிகள் மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளின் கட்டாய தொழிலாளர் முறை சட்ட விரோதமான வர்த்தகத்திற்கு முக்கிய காரணியாகும்.
Post Views:
627