"கம்லூப்ஸ் ரெசிடென்ஷியல் ஸ்கூல்" என்ற பெயரில் கனடா நாட்டின் புகைப்படக் கலைஞர் ஆம்பர் பிராக்கென் (Amber Bracken) என்பவர் எடுத்தப் புகைப்படம் ஆனது 2022 ஆம் ஆண்டின் சிறந்த உலகப் பத்திரிகைப் புகைப்பட விருதை வென்றுள்ளது.
இது டச்சு அறக்கட்டளை உலகப் பத்திரிகைப் புகைப்பட அமைப்பால் வழங்கப் பட்டது
இந்தப் புகைப்படம் சிலுவைகளில் தொங்கவிடப்பட்ட குழந்தைகளின் ஆடைகளைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
இது பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள கம்லூப்ஸ் இந்தியன் ரெசிடென்ஷியல் பள்ளி என்ற பள்ளியில் துஷ்பிரயோகம், புறக்கணிப்பு மற்றும் நோயால் இறந்த இருநூறுக்கும் மேற்பட்டக் குழந்தைகளை நினைவு கூருகிறது.
பிராக்கனின் புகைப்படம் வடக்கு மற்றும் மத்திய அமெரிக்கப் பிராந்தியப் பிரிவில் சிங்கில்ஸ் விருதையும் வென்றது.