மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் அலிஜென்ட்ரோ ப்ரீட்டோ (Alejandro Prieto) என்பவர் 2021 ஆம் ஆண்டின் சிறந்த பறவை புகைப்படக் கலைஞர் என்ற ஒரு பெருமையைப் பெற்றுள்ளார்.
அமெரிக்கா மற்றும் மெக்சிகோ இடையேயுள்ள முள்வேலியுடன் கூடிய எல்லைச் சுவரை உற்று நோக்கும் கிரேட்டர் ரோட்ரன்னர் (greater roadrunner) என்ற ஒரு பறவையினைப் புகைப்படமெடுத்ததற்காக இவர் இப்பெருமையைப் பெற்றார்.
இந்தப் புகைப்படத்திற்கு “Blocked” என தலைப்பிடப்பட்டுள்ளது.