மேற்கு மடகாஸ்கரில் உள்ள ஆண்ட்ரியாமெலோ குகையில் தனித்துவமான, வரலாற்றுக்கு முந்தைய காலத்தினைச் சேர்ந்த பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
இந்த வியத்தகு கண்டுபிடிப்புகள் ஆனது, சில குறிப்பிடத்தக்க கலாச்சார தொடர்புகள் பற்றிய குறிப்புகளைக் கொண்டிருந்தன.
முதலாவதாக, சில இடங்களில் சித்தரிக்கப்பட்ட காட்சிகள் தாலமிக் காலத்தினைச் சேர்ந்த (கி.மு. 300-30) எகிப்திய மதக் கூறுகளுடன் நேரடியாக இணைக்கப் பட்டுள்ளன.
இரண்டாவதாக, சின்னங்கள் மற்றும் சுவர்களில் எழுதப்பட்ட பிற கூற்றுகள் ஆகியவற்றில் இருந்து பெறப்பட்டத் தகவல்கள் எத்தியோப்பியன் மற்றும் ஆப்பிரிக்க-அரபு நாடுகளுடனான தொடர்பைக் காட்டுகின்றன.
இறுதியாக கண்டறியப்பட்ட அடையாளங்கள் மற்றும் கலைக் கூறுகள் போர்னியோ பகுதியைச் சேர்ந்த இரண்டாயிரமாண்டு பழமையான குகைக் கலைப் பாணியைக் குறிக்கிறது.
மடகாஸ்கரில் காணப்பட்ட மாபெரும் அசையாக் (தேவாங்கு) கரடி , யானைப் பறவைகள் மற்றும் ஒரு பெரிய ஆமை போன்ற பல நூற்றாண்டுகளாக அழிந்து விட்டதாகக் கருதப்படுகின்ற மூன்று விலங்குகள் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இது சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானது. அதாவது கிளியோபாட்ராவின் காலம் அல்லது அதற்கு முந்தையது ஆகும்.