TNPSC Thervupettagam

ஆண்ட்ரோகிராஃபிஸ் தெனியென்சிஸ்

January 27 , 2024 303 days 360 0
  • தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் அமைந்த மேற்குத் தொடர்ச்சி மலையில் புதிய தாவர இனம் ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
  • அந்தத் தாவரத்தின் இருப்பிடத்தைக் கொண்டு (தேனி) ‘ஆண்ட்ரோகிராஃபிஸ் தேனியென்சிஸ்’ என்று பெயரிடப் பட்டுள்ளது.
  • ஆண்ட்ரோகிராஃபிஸ் என்பது வங்காளதேசம், இந்தியா, மியான்மர், நேபாளம், இலங்கை மற்றும் மேற்கு இமயமலையைப் பூர்வீகமாகக் கொண்ட வெப்பமண்டல ஆசிய இனமாகும்.
  • இருப்பினும், பெரும்பாலான ஆண்ட்ரோகிராஃபிஸ் வகைகள் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் குறிப்பாக மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் பரவிக் காணப் படுகின்றன.
  • இந்தியாவில் சுமார் 25 ஆண்ட்ரோகிராஃபிஸ் இனங்கள் உள்ளன.
  • இந்தத் தாவர இனமானது சளி, இருமல், காய்ச்சல், மஞ்சள் காமாலை, வயிற்றுப் போக்கு, இருதய நோய் மற்றும் கல்லீரல் நோய்கள் போன்ற பல்வேறு நோய்களுக்கு பாரம்பரியமாக ஆய்வு செய்யப்படாத மற்றும் ஆய்வு செய்யப்பட்ட சில மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்