தனியார் நிறுவனங்கள் ஆதார் அங்கீகாரத்தினை நன்கு அணுகச் செய்வதற்கான ஒரு செயல் முறையை UIDAI குறிப்பிட்டுக் காட்டியுள்ளது.
நல்லாட்சிக்கான ஆதார் அங்கீகாரம் (சமூக நலன், புதுமை, தகவல்) திருத்த விதிகள், 2025 ஆனது, 2020 ஆம் ஆண்டில் முதலில் வெளியிடப்பட்ட ஒரு விரிவான கட்டமைப்பில் இந்தச் சேர்த்தல்களை மேற்கொள்கிறது.
"நல்லாட்சித் திறன், பொது நிதிகளின் தவறானப் பயன்பாட்டினைத் தடுத்தல்" என அவற்றின் நோக்கத்தினை விவரித்த முந்தைய விதிகளில் உள்ள கூற்றுகள் ஆனது தற்போது நீக்கப்பட்டுள்ளது.
தற்போது, நிறுவனங்கள் தங்கள் பயன்பாட்டு நோக்குநிலை குறித்து மத்திய அல்லது மாநில அரசு அமைச்சகம் அல்லது துறைக்கு அனுப்ப வேண்டும். பின்னர் அவை அந்த முன்மொழிவினை UIDAI ஆணையத்திடம் அனுப்ப வேண்டும்.