தெலங்கானா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா உட்பட ஐந்து மாநிலங்கள் சரக்கு மற்றும் சேவை வரி பதிவிற்கு ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு முறையினைப் பயன்படுத்துவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன.
தற்போது, குஜராத் மற்றும் ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒன்றியப் பிரதேசமான புதுச்சேரி ஆகியவை வரி செலுத்துவோரின் ஆதார் சரிபார்ப்பு முறையினைச் சோதனை அடிப்படையில் தொடங்கியுள்ளன.
சரக்கு மற்றும் சேவை வரி அதிகாரிகள் இதுவரை ஒருமுறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP) அடிப்படையிலான ஆதார் சரிபார்ப்பு முறையினைப் பயன்படுத்தி, விண்ணப்பதாரர்களின் அடையாளத்தை அங்கீகரித்து, பதிவு செய்து வருகின்றனர்.