அண்மையில் துபாயில் நடைபெற்று முடிந்த 2018-ஆம் ஆண்டின் 6-வது உலக அரசாங்க மாநாட்டில் (World Government Summit) இந்தியாவின் ஆதார் (Aadhaar) மற்றும் உமாங் செயலிக்கு (Umang App) சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
அணுகத்தகு அரசாங்க வகைப்பிரிவிற்கான சிறந்த மொபைல் அரசாங்க சேவை விருது (Best m-Government Service Award for Accessible Government Category) உமாங் செயலிக்கு வழங்கப்பட்டுள்ளது.
அரசின் சிறந்த வளரும் தொழில் நுட்பவிருது (Best Government Emerging Technologies Award) ஆதாருக்கு வழங்கப்பட்டுள்ளது.