ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகத்துக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார்.
இது தொல்லியல் தளத்திலேயே நிறுவப்பட உள்ள இந்தியாவின் முதல் தொல்பொருள் அருங்காட்சியகம் ஆகும்.
இங்கு 3,000 ஆண்டுகள் பழமையான கலைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் என்னுமிடத்தில் இந்தியத் தொல்லியல் துறை நடத்திய அகழ்வாராய்ச்சியில் ஏராளமான முதுமக்கள் தாழிகள், உலோகம் மற்றும் வெண்கலத்திலானப் பொருட்கள் மற்றும் ஒரு தங்க வைரம் கூட கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
1876 ஆம் ஆண்டிலேயே ஆதிச்சநல்லூரில் அகழாய்வுகள் தொடங்கப்பட்டாலும், 145 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று இது அடையாளம் கண்டறியப் பட்டுள்ளது.