TNPSC Thervupettagam
November 27 , 2017 2583 days 3405 0
  • சூரியனைப் பற்றிய ஆய்விற்கான இந்தியாவின்   ஆதித்யா மிஷனின் முதல் விண்கலனை (Aditya-L1)  2019 ஆம் ஆண்டு விண்ணில் இஸ்ரோ திட்டமிட்டு வருகின்றது.
  • சூரியனைப் பற்றிய ஆய்விற்கான இந்தியாவின் முதல் திட்டமே ஆதித்யா மிஷன்.
  • இது 2019ஆம் ஆண்டு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏழு ஆய்வுக்கருவிகளோடு (Pay loads) PSLV – XL இராக்கெட் மூலம் அனுப்பப்பட உள்ளது.
  • சூரியனுடைய வெளி அடுக்கினை (Carona) ஆய்வு செய்வதையும், அருகாமை புற ஊதா கதிர்களை (Near UV) ஆய்வு செய்வதையும் இத்திட்டம் நோக்கங்களாகக் கொண்டது.
  • ஆதித்யா திட்டத்தின் முதல் விண்கலமானது சூரியன்-புவி அமைப்பின் முதல் லெக்ராஞ்சியன் (lag rangion – 1) புள்ளியின் சுற்றுப் பாதையில் (Halo orbit) நிலை நிறுத்தப்படும்.
  • இந்த முதல் லெக்ராஞ்சியன் புள்ளியின் சுற்று வட்டப் பாதையில் நிலைநிறுத்தப் பெறுவதன் மூலம் சூரியனை தொடர்ந்து கண்காணிக்க முடியும்.
லெக்ராஞ்சியன் புள்ளி இடங்கள் (Lagrangian Points)
  • புவி மற்றும் சூரியன் அல்லது புவி மற்றும் சந்திரன் எனும் இரு பெரும் வான்பொருட்களின் கூட்டு ஈர்ப்பு விசை மூன்றாவது சிறிய வான் பொருளினால் உணரப்படும் மைய விலக்கு விசையினை சமப்படுத்தும் விண்வெளியிலுள்ள ஓர் இடமே லெக்ராஞ்சியன் புள்ளியாகும்.
  • இருபெரும் வான்பொருள்களின் ஈர்ப்பு விசையின் கூட்டிணைவானது ஓர் சமநிலைப் புள்ளியை உண்டாக்கும். (Point of equilibrium).
  • சூரியனைச் சுற்றி 5 லெக்ராஞ்சியன் புள்ளிகள் உள்ளன.
  • முதல் புள்ளியான லெக்ராஞ்சியன்-1 (L1) பூமிக்கும் சூரியனுக்குமிடையே அமைந்துள்ளது. இதனால் வான் பொருள்களின் மறைப்பினால் உண்டாகும் கிரகணங்கள் போன்ற நிகழ்வுகளின் தடங்கல்கள் இன்றி சூரியனை எந்நேரமும் இப்புள்ளியிலிருந்து கண்காணிக்க இயலும்.
  • இந்த சமநிலைப் புள்ளியில் விண்கலத்தை நிலை நிறுத்தி ஆய்வுகளை மேற்கொள்ளலாம்.
  • L2 புள்ளியானது சூரியனுக்கு பின்புறமாக பூமி மற்றும் நிலவின் அருகில் உள்ளது. இந்த புள்ளியில் நிலைநிறுத்தப்படுவதன் மூலம் விண்கலன்கள் ஆழ்ந்த வெளியைப் பற்றி தெளிவான பார்வையை பெற இயலும். மேலும் இப்புள்ளி சூரியனின் கதிரியக்க புலத்திலிருந்து பாதுகாப்பு உடையவை.
  • 2018-ல் செலுத்தப்பட உள்ள நாசாவின் ஜேம்ஸ் வெப் (James Webb) விண்வெளி தொலைநோக்கி இந்தப் புள்ளியில் நிலை நிறுத்தப்பட உள்ளது.
  • மூன்றாவது லெக்ராஞ்சியன் புள்ளியானது (L3) புவியின் சுற்றுவட்டப்பாதைக்கு எதிராக, சூரியனின் பின்புறத்தில் அமைந்துள்ளது. இதுவரை இந்த இடத்தின் பயன்பாடு குறித்து அறியப்படவில்லை.
  • நான்காவது மற்றும் ஐந்தாவது லெக்ராஞ்சியன் புள்ளிகள் நிலையானவை. சூரியனை மையமாகக் கொண்ட புவியின் சுற்று வட்டப் பாதையில் பூமிக்கு முன்னும், பின்னுமாக 60O டிகிரி கோணத்தில் இந்தப் புள்ளிகள் அமைந்துள்ளன.
  • இவை நிலையான தன்மையுடைய புள்ளிகள் என்பதால் தூசுகளும், விண்கற்களும் இவ்விரு புள்ளிகளில் குவிந்துள்ளன.
  • L4 மற்றும் L5 ஐ சுற்றிய விண்கற்கள் டிரோஜன்கள் (Trojans) எனப்படும்.
  • பூமிக்கு அறிமுகமான ஒரே டிரோஜன் விண்கல்லான, 2010 TK7 விண்கல்லானது இப்பகுதியில் தான் கண்டுபிடிக்கப்பட்டது.
  • இதற்கு முன் 1995ல் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ESA-வும் கூட்டிணைந்து சூரியனை ஆய்வு செய்ய SOHO எனும் விண்கலத்தை அனுப்பியது. இருப்பினும் இவ்விண்கலன் தன் செயல்பாட்டை தொடங்கிய உடனே உடைந்து சிதறியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்