TNPSC Thervupettagam

ஆதித்யா-L1 ஆய்வுத் திட்டம்

January 10 , 2024 320 days 371 0
  • இஸ்ரோ நிறுவனம் ஆனது, ஆதித்யா-L1 விண்கலத்தை லாக்ராஞ்சியன் புள்ளியை (L1) சுற்றியமைந்த ஒரு ஹாலோ (முப்பரிமாண) சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தியுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 02 ஆம் தேதியன்று விண்ணில் ஏவப்பட்ட 127 நாட்களுக்குப் பிறகு, இந்தியாவின் முதல் சூரிய ஆய்வுக் கலமான ஆதித்யா-L1 ஜனவரி 06 ஆம் தேதியன்று L1 புள்ளியை அடைந்தது.
  • 1.5 மில்லியன் கி.மீ. பயணத்திற்குப் பிறகு, இந்த விண்கலம் L1 புள்ளியைச் சுற்றி அமைந்த ஒரு முப்பரிமாண சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
  • ஆதித்யா-L1 விண்கலத்தின் சுற்றுப்பாதையானது, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியிலான முப்பரிமாண சுற்றுவட்டப் பாதையாகும்.
  • இது சுமார் 177.86 புவி நாட்கள் அளவிலான சுற்றுப்பாதை காலத்துடன் சூரியன்-பூமி அமைப்பின் வழியில் தொடர்ந்து சுழலும் சுற்றுப்பாதையில் பூமியில் இருந்து சுமார் 1.5 மில்லியன் கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
  • இந்த முப்பரிமாண சுற்றுவட்டப்பாதையானது சூரியன், பூமி மற்றும் இந்த விண்கலத்தை உள்ளடக்கிய L1 புள்ளியில் அமைந்த ஒரு சீரான குறிப்பிட்ட கால இடைவெளி கொண்ட முப்பரிமாண சுற்றுவட்டப்பாதையாகும்.
  • பூமியிலிருந்து L1 புள்ளி அமைந்துள்ள தூரம் பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரத்தில் தோராயமாக 1% ஆகும்.
  • WIND, சூரியசக்தி மற்றும் சூரிய சூழ் மண்டல ஆய்வகம் (SOHO), மேம்பட்ட கட்டமைப்பு ஆய்வுக் கருவி (ACE) மற்றும் விண்வெளிப் பருவநிலை ஆய்வகம் (DSCOVER) என்று தற்போது L1 புள்ளியில் தற்போது நான்கு செயல்பாட்டு விண்கலங்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்