TNPSC Thervupettagam

ஆதித்யா L1 – புவி ஈர்ப்பிலிருந்து வெளியேற்றம்

October 13 , 2023 281 days 277 0
  • லக்ராஞ்சியன் 1 (L1) புள்ளியை நோக்கிப் பயணிக்கும் ஆதித்யா- L1 விண்கலம் புவி ஈர்ப்பின் தாக்கத்திலிருந்து விடுபட்டது.
  • ஆதித்யா- L1 என்பது சூரியனை ஆய்வு செய்வதற்காக செலுத்தப்பட்ட இந்தியாவின் முதல் விண்வெளி சார் ஆய்வகம் ஆகும்.
  • இந்த விண்கலம் பூமியிலிருந்து 9.2 லட்சம் கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பாலான தொலைவு வரை பயணித்துள்ளது.
  • அது தற்போது சூரியன் மற்றும் புவி ஆகியவற்றுக்கு இடையிலான முதலாவது லக்ராஞ்சியன் புள்ளி (L1) நோக்கிய அதன் பாதையில் பயணிக்கிறது.
  • L1 புள்ளி பூமியிலிருந்து சுமார் 1.5 மில்லியன் கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
  • L1 புள்ளி அமைந்துள்ள தொலைவு, பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தொலைவில் தோராயமாக 1% தொலைவு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்