TNPSC Thervupettagam

ஆதி மஹோத்சவ்- Aadi Mahotsav

November 15 , 2017 2594 days 881 0
  • பழங்குடியின மக்களின் வர்த்தகம், உணவுமுறை வழக்கங்கள் மற்றும் கலாச்சார அம்சங்கள்  போன்றவற்றை கொண்டாடுவதற்காக ‘ஆதி மஹோத்சவ்‘  எனும் திருவிழா நிகழ்ச்சியை இந்தியப் பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு நிறுவனத்தோடு (TRIFED – Tribal Co-operative Marketing Development Federation Ltd) இணைந்து மத்தியப் பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்  (Ministry of trial affairs) நடத்துகின்றது.
  • இத்திருவிழாவின் கருத்துரு ”பழங்குடியின மக்களின் உணவுமுறை வழக்கங்கள், வர்த்தகம் மற்றும் கலாச்சார அம்சம் போன்றவற்றைக் கொண்டாடுதல்”.
  • 2017-ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி முதல் 30 வரை நடைபெற உள்ள இந்த “ஆதி மஹோத்சவ்” நிகழ்ச்சியில் 25 மாநிலங்களைச் சேர்ந்த 480 பழங்குடியின கைவினைக் கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.
  • இத்திருவிழாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விற்பனையோடு கூடிய கண்காட்சியில் அமைக்கப்படும் அங்காடிகளில் ஏராளமான பழங்குடியின கைவினைப் பொருட்கள், பழங்குடியின கலைப் பொருட்கள், ஓவியங்கள், நகை அணிகலன்கள் போன்றவை காட்சிப்படுத்தப்பட உள்ளன.
  • முதன் முறையாக பழங்குடியின வர்த்தகர்களிடம் மேற்கொள்ளும் நுகர்வுக்காக பண அட்டைகள் (Debit Cards) அல்லது கடன் அட்டை (Credit Card) மூலம் கட்டணப் பரிமாற்றம் செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்