பழங்குடியின மக்களின் வர்த்தகம், உணவுமுறை வழக்கங்கள் மற்றும் கலாச்சார அம்சங்கள் போன்றவற்றை கொண்டாடுவதற்காக ‘ஆதி மஹோத்சவ்‘ எனும் திருவிழா நிகழ்ச்சியை இந்தியப் பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு நிறுவனத்தோடு (TRIFED – Tribal Co-operative Marketing Development Federation Ltd) இணைந்து மத்தியப் பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் (Ministry of trial affairs) நடத்துகின்றது.
இத்திருவிழாவின் கருத்துரு ”பழங்குடியின மக்களின் உணவுமுறை வழக்கங்கள், வர்த்தகம் மற்றும் கலாச்சார அம்சம் போன்றவற்றைக் கொண்டாடுதல்”.
2017-ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி முதல் 30 வரை நடைபெற உள்ள இந்த “ஆதி மஹோத்சவ்” நிகழ்ச்சியில் 25 மாநிலங்களைச் சேர்ந்த 480 பழங்குடியின கைவினைக் கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.
இத்திருவிழாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விற்பனையோடு கூடிய கண்காட்சியில் அமைக்கப்படும் அங்காடிகளில் ஏராளமான பழங்குடியின கைவினைப் பொருட்கள், பழங்குடியின கலைப் பொருட்கள், ஓவியங்கள், நகை அணிகலன்கள் போன்றவை காட்சிப்படுத்தப்பட உள்ளன.
முதன் முறையாக பழங்குடியின வர்த்தகர்களிடம் மேற்கொள்ளும் நுகர்வுக்காக பண அட்டைகள் (Debit Cards) அல்லது கடன் அட்டை (Credit Card) மூலம் கட்டணப் பரிமாற்றம் செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.