மத்திய நிதித்துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் “ஆத்மநிர்பர் (தற்சார்பு) திட்டத்தின்” இரண்டாவது நிதித் தொகுப்பை அறிவித்துள்ளார்.
முக்கியமான நடவடிக்கைகள்
2 மாதங்களுக்கு அதாவது 2020 ஆம் ஆண்டு மே மற்றும் ஜுன் மாதம் ஆகிய காலகட்டங்களில் இலவச உணவு தானியங்கள் அனைத்து இடப்பெயர்வுத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட இருக்கின்றன.
இந்தியாவில் எந்தவொரு நியாய விலைக் கடையிலிருந்தும் இடப்பெயர்வுத் தொழிலாளர்களுக்குப் பொது வழங்கல் முறையை அனுமதிக்க தொழில்நுட்ப முறை பயன்படுத்தப்பட இருக்கின்றது. எனவே “ஒரு தேசம் ஒரு குடும்ப அட்டை” என்ற திட்டத்தின் கீழ் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாத வாக்கில் 100% தேசிய உள்ளடக்கலை அடைய முடியும்.
ஈடு செய்யும் காடு வளர்ப்பு மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையத்தின் கீழ் உள்ள ரூ. 6000 கோடி நிதியானது காடு வளர்ப்பு மற்றும் தோட்டப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட இருக்கின்றது.