TNPSC Thervupettagam

ஆத்மநிர்பர் பிரச்சாரம் – நான்காவது நிதித் தொகுப்பு

May 20 , 2020 1654 days 705 0
  • இந்திய அரசானது 8 துறைகளில் கொள்கை சார்ந்த சீர்திருத்தங்களைக் கொண்டு வர இருக்கின்றது.
  • வணிக ரீதியிலான சுரங்கப் பணியானது நிலக்கரித் துறையில் கொண்டு வரப்பட இருக்கின்றது.
  • உலகளவில் இந்தியா மூன்றாவது மிகப்பெரிய நிலக்கரி இருப்புகளைக் கொண்டிருந்த போதிலும்  இந்தியா தற்பொழுதும் நிலக்கரியை இறக்குமதி செய்து வருகின்றது. 
  • நிலக்கரியின் வணிகமயமாக்கலானது நிலக்கரி இறக்குமதியைக் குறைக்க இருக்கின்றது. 
  • மத்திய தாதுக்கள் துறை அமைச்சகமானது தாதுக் குறியீட்டை வெளியிட இருக்கின்றது.
  • பாதுகாப்புத் துறையில் அந்நிய நேரடி முதலீடானது 49%லிருந்து 74% ஆக அதிகரிக்கப் பட்டுள்ளது.
  • ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட இருக்கின்றன.
  • மத்திய அரசானது மருத்துவ ஐசோடோப்புகளை உருவாக்குவதற்காக பொது-தனியார் பங்களிப்பு முறையில் ஒரு ஆராய்ச்சி அலகை ஏற்படுத்த இருக்கின்றது.
  • மத்திய அரசானது இந்தியாவை விமானத்தின் பராமரிப்பு, பழுது பார்த்தல், முழுவதும் சரி செய்தல் (MRO - Maintenance, repair and overhaul of aircraft) என்ற ஒரு மையமாக மாற்ற இருக்கின்றது.
  • இந்தியாவில்  உள்ள பெரும்பாலான விமானங்கள் தங்களது பராமரிப்பு மற்றும் பழுது பார்த்தல் பணிகளுக்காக வெளிநாட்டிற்குச் செல்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்