TNPSC Thervupettagam

ஆத்ரேயபுரம் பூதரெகுலுக்கு புவிசார் குறியீடு

September 21 , 2023 303 days 255 0
  • அரிசி மற்றும் வெல்லத்தால் செய்யப்பட்ட ‘ஆத்ரேயபுரம் பூதரேகுலு’ என்ற இனிப்பு வகைக்குப் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த இனிப்பு உற்பத்தியானது ஆத்ரேயபுரம் கிராமத்தில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை இது உறுதி செய்கிறது.
  • இந்தக் கிராமமானது ஆந்திரப் பிரதேசத்தின் கோனாசீமா மாவட்டத்தில் கோதாவரி நதிக் கரையில் அமைந்துள்ளது.
  • MTU-3626 ரக அரிசியானது இந்த இனிப்பு வகையின் முக்கிய மூலப்பொருள் ஆகும்.
  • இந்த ரக அரிசியானது அந்தப் பகுதியில் ‘பொண்டாலு’ என்று அழைக்கப்படுகிறது.
  • இது கோனாசீமா பகுதியில் அதிகம் விளைவிக்கப்பட்டு, கேரளாவில் அதிகம் பயன்படுத்தப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்