TNPSC Thervupettagam

ஆந்திரப் பிரதேசத்தின் புதிய மாநிலச் சின்னங்கள்

June 3 , 2018 2239 days 2374 0
  • 2014-ம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தை இரண்டாகப் பிரித்த பிறகு ஆந்திர மாநில அரசாங்கம் தனது மாநில சின்னங்களை அறிவித்துள்ளது.
  • மாநிலத்தின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் அறிவியல் தொழில் நுட்பத் துறையால் இந்த மாநிலச் சின்னங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
  • இதில் குறிப்பிடத்தக்க மாற்றம் மாநிலப் பறவையாகும். பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசத்தின் பறவை பாலபிட்டா அல்லது இந்தியன் ரோலர் என்பதாகும். தற்பொழுது இது ராமா சிலுக்கா அல்லது ரோஸ் நிறமுடைய பாரகீட் என்பதாக மாற்றப்பட்டுள்ளது.
  • பாலபிட்டா என்பது தற்போது தெலுங்கானா, ஒடிஸா மற்றும கர்நாடகா ஆகியவற்றின் மாநிலப் பறவையாகும்.

  • பிளாக்பக் அல்லது கிருஷ்ணா ஜிங்கா எனும் விலங்கை மாநில விலங்காக ஆந்திரப் பிரதேசம் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
  • பிரிக்கப்பட்ட பிறகு தெலுங்கானா மாநிலம் புள்ளிமான் அல்லது ஜின்கா என்ற விலங்கை மாநில விலங்காக ஏற்றுக்கொண்டுள்ளது.
  • வேம்பு அல்லது வேப்ப சிட்டு மாநில மரமாகப் பிரிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
  • தெலுங்கானா அரசு வேப்ப மரத்திற்குப் பதிலாக ஜம்மி செட்டு என்ற மரத்தை ஏற்றுக் கொண்டுள்ளது.
  • பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசம் நீர் லல்லி அல்லது கழுவா என்ற மலரை மாநில மலராக வைத்திருந்த போதிலும் இரு மாநிலங்களும் அதை நிராகரித்து விட்டன.
  • ஆந்திரப் பிரதேச அரசு மல்லிகைப் பூவை அதனுடன் தனக்கென்று எந்த கலாச்சார முக்கியத்துவம் இல்லாத போதும் மாநில மலராக ஏற்றுக் கொண்டுள்ளது.
  • மல்லிகையை ஏற்றுக் கொண்டதன் நோக்கம் அது குண்டூர், பிரகாசம், கர்நூல், கடப்பா, அனந்தப்பூர், மற்றும் சித்தூர் மாவட்டங்களில் அது வணிக ரீதியாக பயிரிடப்படுவதே ஆகும்.
  • தெலங்கானா மாநிலத்தின் மிகப் புகழ் வாய்ந்த பண்டிகையான பதுக்கம்மா பண்டிகையில் பெருவாரியாக தங்கிடிப் பூ பயன்படுத்தப்படுவதால் அம்மாநில அரசு கழுவாவிற்கு பதிலாக அதை மாநிலப் பூவாக ஏற்றுக் கொண்டுள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தின் மாநில சின்னங்கள்

  • மாநில பறவை – ரோஸ் நிறக் கழுத்துடைய பாரகீட் – உள்ளூரில் ராமா சிலுக்கா என இப்பறவை அறியப்படுகின்றது.
  • மாநில மரம் – வேம்பு – உள்ளூரில் வேப்ப செட்டு என அறியப்படும்.
  • மாநில விலங்கு – பிளாக்பக் – உள்ளூரில் கிருஷ்ணா ஜிங்கா என அறியப்படும்.
  • மாநிலப் பூ – மல்லிகை

தெலுங்கானாவின் மாநில சின்னங்கள்

  • மாநிலப் பறவை – இந்தியன் ரோலர் அல்லது பாலப்பிட்டா
  • மாநில மரம் – ஜம்மி செட்டு
  • மாநில விலங்கு – ஜிங்கா அல்லது புள்ளிமான்
  • மாநில பூ – தங்கிடிப் பூ

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்