ஆந்திரப் பிரதேசம் – மகப்பேறு விகிதத்தை அதிகரிப்பதற்கான திட்டம்
November 2 , 2024 27 days 132 0
ஆந்திரப் பிரதேச மாநிலம் அந்த மாநில மக்களை அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள ஊக்குவிக்கும் சட்டத்தை உருவாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
இது ஒரு குடும்பத்திற்கு இரண்டுக்கும் குறைவான குழந்தைகள் இருப்பது என்பது இளையோர்களின் மக்கள்தொகையில் மிகவும் விரைவான வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதைக் குறிப்பிட்டு மக்கள்தொகைப் பற்றாக்குறையை எடுத்துக் காட்டியுள்ளது.
குறைவான கருவுறுதல் விகிதங்களால், தென் இந்திய மாநிலங்களில் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறைக்கப்படுவது குறித்த கவலைகள் எழுந்துள்ளன.
குறிப்பாக தென் மாநிலங்களில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களின் சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவை தனது சக வட மாநிலங்களை விட குறைவான கருவுறுதல் விகிதங்களைக் கொண்டுள்ளன.
20 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கு அடுத்தபடியாக, அடுத்த ஆண்டு மட்டுமே, உத்தரப் பிரதேசம் மாற்று (ஈடு) நிலை கருவுறுதல் விகிதத்தினை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
2011 மற்றும் 2036 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் மக்கள் தொகையானது 31.1 கோடி அதிகரிக்கும் என்ற நிலையில் இந்த வளர்ச்சியில் தென் மாநிலங்களின் பங்கு சுமார் 2.9 கோடியாக மட்டுமே இருக்கும்.
இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்ற விதியையும் ஆந்திரப் பிரதேசம் சமீபத்தில் ரத்து செய்தது.