TNPSC Thervupettagam

ஆந்திரப் பிரதேசம் – மகப்பேறு விகிதத்தை அதிகரிப்பதற்கான திட்டம்

November 2 , 2024 20 days 123 0
  • ஆந்திரப் பிரதேச மாநிலம் அந்த மாநில மக்களை அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள ஊக்குவிக்கும் சட்டத்தை உருவாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
  • இது ஒரு குடும்பத்திற்கு இரண்டுக்கும் குறைவான குழந்தைகள் இருப்பது என்பது இளையோர்களின் மக்கள்தொகையில் மிகவும் விரைவான வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதைக் குறிப்பிட்டு மக்கள்தொகைப் பற்றாக்குறையை எடுத்துக் காட்டியுள்ளது.
  • குறைவான கருவுறுதல் விகிதங்களால், தென் இந்திய மாநிலங்களில் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறைக்கப்படுவது குறித்த கவலைகள் எழுந்துள்ளன.
  • குறிப்பாக தென் மாநிலங்களில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களின் சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • அவை தனது சக வட மாநிலங்களை விட குறைவான கருவுறுதல் விகிதங்களைக் கொண்டுள்ளன.
  • 20 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கு அடுத்தபடியாக, அடுத்த ஆண்டு மட்டுமே, உத்தரப் பிரதேசம் மாற்று (ஈடு) நிலை கருவுறுதல் விகிதத்தினை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • 2011 மற்றும் 2036 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் மக்கள் தொகையானது 31.1 கோடி அதிகரிக்கும் என்ற நிலையில் இந்த வளர்ச்சியில் தென் மாநிலங்களின் பங்கு சுமார் 2.9 கோடியாக மட்டுமே இருக்கும்.
  • இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்ற விதியையும்  ஆந்திரப் பிரதேசம் சமீபத்தில் ரத்து செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்