TNPSC Thervupettagam

ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்

May 28 , 2019 1882 days 619 0
  • 2019 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதியன்று விஜயவாடாவில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்க விருக்கின்றார்.
  • ஆந்திரப் பிரதேச சட்ட சபையில் மொத்தமுள்ள 175 இடங்களில் ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சி 151 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் மொத்தமுள்ள 25 மக்களவை இடங்களில் 22 இடங்களில் இக்கட்சி வெற்றி பெற்றுள்ளது.
  • இவர் தற்பொழுது முதலமைச்சராக இருக்கும் தெலுங்கு தேசக் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடுவை வீழ்த்தினார்.
  • இவர் பிரதமர் மோடியை சந்தித்து ஆந்திரப் பிரதேசத்தின் சிறப்பு மாநில அந்தஸ்திற்கான கோரிக்கையைப் பிரதமரிடம் முன்வைத்தார்.
சிறப்பு மாநில அந்தஸ்து (SCS – Special Category Status)
  • SCS என்ற கருத்துருவானது 5-வது நிதி ஆணையத்தினால் முதன்முதலாக 1969 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இது சில பின்தங்கிய மாநிலங்களுக்கு மத்திய நிதியுதவி மற்றும் வரிச் சலுகைகள் என்ற முறையில் முன்னுரிமை அளித்திட வழி வகுக்கின்றது.
  • முதன்முதலில் அஸ்ஸாம், நாகாலாந்து மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்கு SCS அந்தஸ்து வழங்கப்பட்டன.
  • இதன் பின்னர் அருணாச்சலப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், சிக்கிம், திரிபுரா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கும் SCS அந்தஸ்து வழங்கப்பட்டன.
  • ஆனால் 14-வது நிதி ஆணையம் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மூன்று மலை மாநிலங்கள் (ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட்) ஆகியவற்றைத் தவிர்த்து மற்ற மாநிலங்களுக்கான “சிறப்பு மாநில அந்தஸ்தை” நீக்கியுள்ளது.
  • அதற்குப் பதிலாக இந்த ஆணையம் மத்திய அரசிலிருந்து மாநிலங்களுக்கு வழங்கப்படும் வரிப் பகிர்வை 32 சதவிகிதத்திலிருந்து 42 சதவிகிதமாக அதிகரிக்குமாறுப் பரிந்துரைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்