ஆந்த்ரோபோசீன் காலத்தின் காற்றின் நிலை குறித்த திட்டம்
June 14 , 2024 163 days 259 0
லாஸ் ஏஞ்சல்ஸ், பெல்ஃபாஸ்ட் மற்றும் பர்மிங்காம் ஆகிய இடங்களில் உள்ள அரங்கக் காட்சிகளில் ஆந்த்ரோபோசீன் காலத்தில் காற்றின் நிலை குறித்த திட்டம் என்ற ஒரு காட்சியை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கண்ணுக்குத் தெரியாத காற்று மாசுபாட்டை காட்சிப்படுத்துவதற்காக "ஒளி கொண்டு உருவாக்கப்பட்ட ஓவியம்" என்று அழைக்கப்படும் ஒரு சர்வதேச திட்டத்திற்காக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கலைஞர்கள் இணைந்துள்ளனர்.
இதைக் கொண்டு காற்றில் உள்ள அபாயகரமான நுண் துகள்களின் (PM2.5) அளவைக் காணலாம்.
டிஜிட்டல் ஒளி ஓவியம் மற்றும் குறைந்த விலையிலான காற்று மாசு உணர்விகளை இணைத்து, இந்தியா, எத்தியோப்பியா மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகிய மூன்று நாடுகளில் உள்ள பல்வேறு நகரங்களில் காணப்படும் மாசு அளவு பற்றிய புகைப்பட ஆதாரங்களை அறிவியல் குழு தயாரித்தது.