TNPSC Thervupettagam

ஆந்த்ரோபோசீன் காலம்

May 30 , 2019 2007 days 721 0
  • ஆந்த்ரோபோசீன் பணிக் குழுவில் உள்ள 34 உறுப்பினர்கள் ஒரு புதிய புவியியல் சகாப்தமான ஆந்த்ரோபோசீன் காலகட்டத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு ஆதரவாக 29-4 என்ற கணக்கில் வாக்களித்துள்ளனர்.
  • இது 11,700 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய ஹோலோசீன் காலகட்டத்தின் முடிவைக் குறிக்கின்றது.
  • ஆந்த்ரோபோசீன் என்ற சொற்கூறானது நோபல் பரிசு பெற்றவரான பால் குரூட்சென் மற்றும் யூஜுன் ஸ்டோர்மென் ஆகியோரால் 2000 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
  • ஆந்த்ரோபோசீன் காலகட்டம் மனித நடவடிக்கைகள் பூமியின் மீது உள்ள பல நிலைமைகள் மற்றும் செயல்முறைகள் ஆகியவற்றை மாற்றியுள்ளதைக் குறிக்கக் கூடிய தற்போதைய புவியியல் காலகட்டமாகும்.
  • ஆராய்ச்சியாளர்கள் ஆந்த்ரோபோசீன் காலகட்டத்தை உருவாக்கிய “தங்கக் குறியீட்டை” எதிர்பார்த்து ஆய்வு செய்து வருகின்றனர்.
  • தங்கக் குறியீடு என்பது புதிய சகாப்தத்தை உருவாக்கத் தூண்டும் ஒரு சர்வதேச அளவிலான குறியீடாகும்.
  • உதாரணமாக 1950 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இருந்து நிகழ்த்தப்பட்ட அணுகுண்டு சோதனையினால் உலகம் முழுவதும் பரவிய செயற்கை கதிரியக்கச் சிதைவு மூலமான அணுக்கரு நிகழ்வு.
அதிகாரப் பூர்வ அமைப்புகள்
  • இந்தப் பரிந்துரை சர்வதேச பாறை அடுக்கியல் ஆணையத்திற்கு (International Commission on Stratigraphy) அனுப்பப்படவிருக்கின்றது. இது அதிகாரப் பூர்வ புவியியல் காலகட்ட அட்டவணையை நிர்வகிக்கின்றது.
  • இறுதி ஒப்புதலானது சர்வதேசப் புவியியல் அறிவியல் ஒன்றியத்தினால் வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்